இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக மாநாட்டை நினைத்து அஞ்சி நடுங்குகிறதா விடியா திமுக?

ஆகஸ்ட் 20ம் தேதி ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஸ்தம்பிக்கப்போகிறது …. மதுரையே குலுங்கப்போகிறது… என்ன மதுரை கள்ளழகர் திருவிழா வா? அது சித்திரையில் தானே நடக்கும் ? என்று நீங்கள் கேட்கலாம்… அதைவிட மிகப்பிரம்மாண்டமாய், கடல்போல பொங்கி வரப்போகிறார்கள் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்… 2 கோடிக்கும் அதிகமான தொண்டர்களைக்கொண்ட அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் அடிநாதமான தொண்டர் படை மதுரை நோக்கி மாநாட்டில் கலந்துகொள்ள படையெடுக்கப்போகிறது…

இந்தச்செய்தி அறிந்ததும் ஏற்கனவே உடன்பிறப்புகளின் அலப்பறையால் தூக்கம் தொலைத்து தவிக்கும் ஸ்டாலினுடன் சேர்ந்து, ஒட்டுமொத்த திமுகவினருக்குமே தூக்கம் போச்சு என்று தான் சொல்ல வேண்டும்…. அதன் வெளிப்பாடுதான் உதயநிதியின் உண்ணாவிரத நாடகம்… நீட் தேர்வுக்கு நியாயம் வேண்டி உண்ணாவிரதம் இருக்கப்போகிறாராம் வாரிசு அமைச்சர்… ஏன் இந்த திடீர் உண்ணாவிரதம்?

இதுநாள் வரை ஆட்சியில் ஒன்றும் செய்யாமல் இருந்த உளவுத்துறை, படுசுறுசுறுப்பாக வேலை பார்த்து முதல்வருக்கு அனுப்பிய ரிப்போர்ட்டில், அதிமுக மாநாட்டிற்கு சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்ற விஷயத்தைச் சொல்ல, பதறிப்போயிருக்கிறார் ஸ்டாலின்… அந்த பதற்றத்தின் வெளிப்பாடுதான் உடனடியாக உண்ணாவிரத நாடகம் போடு என்று உதயநிதிக்கு உத்தரவு போட்டிருக்கிறார் ஸ்டாலின் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்..

உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதெல்லாம் திமுகவுக்கு ஒன்றும் புதிதல்ல… தாத்தா போட்ட நாடகத்தை பேரன் போடப்போகிறார் அவ்வளவே,…. ஈழத்தில் நடந்தபோருக்கு, தமிழ்நாட்டில் 2 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து, அங்கே போர் நின்றுவிட்டதாக அறிவித்த அறிவாலயத்து ரத்தம் அல்லவா? இப்போதும் அதை அப்படியே காப்பியடிக்கிறது.. நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்போராட்டம் நடத்த திராணியற்று, இரண்டரை ஆண்டுகளாய் கடலில்போட்ட கல்லாய் இருந்துவந்த திமுக இப்போது வந்து உண்ணா விரதம் என்று சால்ஜாப்பு காட்டிக்கொண்டிருக்கிறது…

வெற்றிகரமாக நடக்கப்போகும், அதிமுக மாநாட்டை எப்படி திசை திருப்பலாம்? ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனமும் எதிர்க்கட்சியான அதிமுகவின் மீது எப்படி விழலாம்? இந்தியாவே திரும்பிப்பார்க்கும் அளவிற்கான ஓர் மாநாட்டை மக்களிடம் கொண்டுசென்று சேராமல் தடுப்பது எப்படி ? என்று அதற்கும் ஒரு குழு போட்டு ஸ்டாலின் யோசித்திருப்பார் போல… அதில் உதித்ததுதான் இந்த உண்ணாவிரத ஐடியா?

விஞ்ஞானப்பூர்வ ஊழலை மட்டுமே நித்தமும் சிந்திக்கும் திமுக எப்படியெல்லாம் வில்லங்கமாக யோசிக்கிறது பாருங்கள்… இங்குதான் திமுகவின் தில்லுமுல்லுகளை புரிந்துகொள்ள வேண்டும்.. அதெப்படி அதிமுக மாநாடு நடக்கப்போகும் அதே ஆகஸ்ட் 20 ம்தேதி இந்த உண்ணாவிரதத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறது திமுக? எல்லாம் அரசியல் தான்… இவ்வளவு யோசித்து, மண்ட மேல உள்ள கொண்டைய மறந்துட்டீங்களே பாஸ் என்று திமுகவைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்…

ஆக, நீட் தேர்வுக்கு எந்த அடிப்படையில் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார் உதயநிதி? அதுவும் ஆகஸ்ட் 20 ந்தேதி அன்றே உண்ணாவிரதம் அறிவித்து இருப்பது ஏன்? அதிமுக மாநாடு பேசுபொருளாகி விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு திமுக வேலை செய்வது ஏன்? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில்தான்… அதிமுகவின் மதுரை மாநாட்டைப் பார்த்து திமுக அஞ்சி நடுங்குகிறது இந்த விடியா திமுக…. என்பதுதான்.

 

Exit mobile version