இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! திமுகவிற்கு கிலியை ஏற்படுத்தியிருக்கும் “அதிமுக மதுரை எழுச்சி மாநாடு”

மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அதிதீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திமுகவிற்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது இந்த மாநாடு என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…

அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, நடைபெறும் முதல் பிரம்மாண்ட மாநாடு என்பதாலும், விடியா திமுக அரசின் மீது ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசும் கடும் கொந்தளிப்பில் இருப்பதாலும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் பெருந்திரளாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இப்போதிலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர்.

இதையெல்லாம் அரசல் புரசலாக அறிந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், தங்கள் கட்சியினரிடம் புலம்பித்தள்ளியிருப்பதாகவும், அதிமுகவிற்கு எப்படி இந்தளவிற்கு மக்கள் ஆதரவு என்று கேள்வி மேல் கேள்வி கேட்டிருப்பதாகவும் திமுகவின் முக்கியப்பிரமுகர்களே வெளியில் பேசிக்கொள்கின்றனர்…

சில மாவட்டங்களில் திமுகவின் நிர்வாகிகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை, பொது மேடைகளில் நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொள்வதும், நிர்வாகிகள் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அமைச்சர்களையே கைநீட்டி கேள்வி கேட்டு அசிங்கப்படுத்துவதும் என்று ஸ்டாலினின் தூக்கத்தை ஒவ்வொரு நாளும் கெடுத்துக்கொண்டிருக்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்..

2006-11 மைனாரிட்டி திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் மாநாடுபோல் நடந்த அதிமுகவின் பொதுக்கூட்டங்கள் எப்படி உதவியதோ, அதேபோல இந்த மதுரை மாநாடு விடியா அரசுக்கு ஒரு முடிவுரை எழுதும் என்று பொதுமக்களே பேசிக்கொண்டிருக்கின்றனர்..

சொந்தக் கட்சியில் இருக்கும் பூசல்களை சமாளிக்க முடியாமலும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுமோ என்கிற பயத்திலும் இருக்கிறதா விடியா திமுக அரசு? பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் வீருகொண்டு அதிமுக பயணித்துக்கொண்டிருப்பதோடு, எதிர்க்கட்சியாகவும் ஆளும் திமுகவின் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி வருவதாலும் எடப்பாடி கே பழனிசாமியைப் பார்த்து பயப்டுகிறாரா ஸ்டாலின்?சமீபத்தில் 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்த்த அதிமுகவின் வளர்ச்சியால் ஆடிப்போயிருக்கிறாரா ஸ்டாலின்? ஆக மொத்தத்தில் அண்ணா திமுகவின் வீர வரலாறு எழுச்சி மாநாடு இந்த திராணியற்ற ஆட்சிக்கு முடிவுரை எழுதும் என்ற எண்ணத்தோடு இப்போதே தங்கள் மதுரைப் பயணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.

Exit mobile version