இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மகளிர் உரிமைத்தொகைக்கு SC,ST மக்களின் நல நிதியைப் பயன்படுத்திய ஸ்டாலின்!

சமூக நீதி, சாம்பார், ரசம் என்று மேடைக்கு மேடை முழங்கிக்கொண்டிருக்கிறார்கள் திமுகவின் உடன் பிறப்புகள்.. ஆனால், நிஜத்தில் பட்டியலின மக்களுக்கு போய்சேரவேண்டிய காசை கட்டம் கட்டி கல்லாவில் சேர்த்துக்கொண்டிக்கிறார்கள் விஞ்ஞான ஊழல் அறிந்த திமுக.

பட்டியலின மக்களின் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய தொகுப்பில் இருந்து குறிப்பிட்ட தொகை மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும். அந்தக்காசை வைத்துக்கொண்டு எஸ்சி, எஸ்டி மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் ஒரு மாநில அரசு செயல்படுத்தும்.. ஆனால், இந்த விடியா அரசு என்ன செய்திருக்கிறது தெரியுமா? அவர்களுக்கு போய்ச்சேரவேண்டிய காசை எடுத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குகிறது.. ஆம், கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, பட்டியலின மக்களுக்கு பட்டை நாமம் போட்டிருக்கிறார் ஸ்டாலின்.

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், தமிழ்நாடு அரசு பதிலளிக்க, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் சார்பில் தற்போது விளக்கம் கேட்டு தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்துள்ளதாகவும், இதை தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் விசாரிப்பதாகவும் கூறியுள்ளதோடு, புகார் குறித்து 15 நாட்களுக்குள் திமுக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2018-19ம் ஆண்டு 95.3 சதவீதம் , 2019-20 ம் ஆண்டு 96 சதவீதமும், 2021 ம் ஆண்டு 93.23 சதவீத நிதியை பட்டியலின மக்களின் வளர்ச்சிக்காக செலவிட்டு அவர்களின் வாழ்வாதாரம் காத்தது அதிமுக அரசாங்கம்.. ஆனால் இந்த விடியா அரசு பதவியேற்றதும், 2022 – 23ம் நிதியாண்டில் வெறும் 35 சதவீத பணத்தை மட்டுமே உபாயோகப்படுத்தியிருக்கிறது. இந்த லட்சணத்தில்தான் தங்களை சமூகநீதிக் காவலர்கள் என்று வேறு பெருமை பீத்திக்கொள்கின்றனர்…
தூய்மை மற்றும் துப்புறவு பணிகளில் ஈடுபடும் பெரும்பாலானவர்களுக்கு கையுறைகள் கூட இன்னும் கொடுப்பதில்லை இந்த விடியா அரசு… ஆனால் ஈரேழு உலகத்திற்கும் கேட்பதுபோல சமூக நீதிக்காக சீன் போடுவார்கள் இந்த ஸ்டாலின் அரசு…

சொன்னதையும் செய்தோம், சொல்லாததையும் செய்தோம் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின், ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதியை மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பயன்படுத்தினால், பட்டியல் மற்றும் பழங்குடி இன மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா?பட்டியல் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு துரோகம் இழைக்கிறாரா “சமூக நீதி” பேசும் முதல்வர் ஸ்டாலின்? என்ற கேள்வியை முன்வைக்கும் பட்டியலின மக்களுக்கு என்ன விடைதருவோம்? என்பதுதான் இன்றைய நாளில் தமிழக மக்களின் ஒரே சந்தேகம்.

i

Exit mobile version