இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஒன்றரை கோடி டூ 2 கோடியே 44 ஆயிரம்! அதிமுகவை நோக்கி படையெடுக்கும் கோடான கோடி மக்கள்!

எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுக நிலைத்து நிற்கும் என்று புரட்சித் தலைவி ஜெயலலிதா சொன்னது இன்று நிரூபணமாகி இருக்கிறது….

ஆம்….அஇஅதிமுகவில் இணைய வேண்டும் என்று 2 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் சமீப காலங்களாக வந்து கொண்டிருந்த நிலையில், அதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்….. கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி முதல் புதிய உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது வரை 2 கோடியே 44 ஆயிரத்து 400 பேர் கழக உறுப்பினர்களாக இணைத்து கொள்ள விண்ணப்பித்துள்ளனர்….

பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் அவர்களால் 1972 ஆம் ஆண்டு மக்களுக்காக தொடங்கப்பட்ட மக்கள் இயக்கம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தன்னை அரசியல் பாதைக்கு இழுத்து வந்து, இதயக்கனி என்று அன்போடு அழைத்து அரசியல் அங்கீகாரம் அளித்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரையே கட்சிக்குச் சூட்டி அழகு பார்த்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

புரட்சித்தலைவருக்கு பிறகு, கழகத்தின் தொண்டர்படையை ஒன்றைக்கோடியாக உயர்த்தினார் அவருடைய அடியொற்றி வந்த புரட்சித்தலைவி… ஆட்சியையும் கட்சியையும் ராணுவக்கட்டுப்போடு நடத்திய மாபெரும் தலைவியான அம்மாவிற்கு பிறகு கழகத்தை காக்க வந்த தாயின் தலைமகன் தான் எடப்பாடி கே பழனிசாமி …

முழுக்க முழுக்க தொண்டர்கள் சூழ, உருவான தமிழகத்தின் ஒரே கட்சி அதிமுக மட்டுமே என்று அடித்து கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். அதிமுகவின் அடிப்படைத் தொண்டராக இருப்பவர் கூட முதலமைச்சராகலாம் என்பதற்கு வாழும் உதாரணமாக இருப்பவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும் கழகப் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி.

வாரிசு அரசியலை எதிர்த்து, ஊழலை எதிர்த்து மக்களின் மனநிலையை புரிந்து கொண்ட ஓர் தலைமையைக் கொண்டிருப்பதனாலேயே அதிமுக ஒரு மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்தது. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அவரைத் தொடர்ந்து எடப்பாடி கே பழனிசாமி என்ற மாபெரும் ஆளுமைகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அதிமுக எனும் பேரியக்கத்தை இந்திய அளவில் உயர்த்தி தற்போதும் இராணுவக்கட்டுப்பாட்டோடு தொண்டர்களை வழிநடத்துவதாலேயே எந்தக்கொம்பாதி கொம்பனாலும் அசைக்கக்கூட முடியாத மக்கள் இயக்கம் அதிமுக உயிர்போடு இருக்கிறது…

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரைப்போலவே, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக க்ளீன் ஸ்வீப் செய்யப் போகிறதா?

கழக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் பொதுமக்களையும் மதித்து, அன்பு செலுத்தும் இரும்பு தேசத்தின் கரும்பு மனிதரான பொதுச் செயலாளரின் தலைமைப் பண்பால் ஈர்க்கப்பட்டு கழகத்தில் இளைஞர்கள் இணைகின்றனரா? ஒன்றரை கோடியாக இருந்த தொண்டர் படை 2 கோடியை கடந்தது எப்படி? அதிமுகவை ராணுவக்கட்டுக்கோப்போடு எடப்பாடி கே.பழனிசாமி எழுச்சிபெறச் செய்தது எப்படி? என்ற கேள்விக்கான பதிலை வரலாறு சொல்லும்.

Exit mobile version