அமைச்சர் பிடிஆர் ஆடியோ வெளியானதன் எதிரொலியாக, ஜி-ஸ்கொயர் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடந்துள்ளது குறித்தும், ஜி ஸ்கொயர் மூலமாக ஒரே ஆண்டில் முப்பதாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தார்களா உதயநிதி மற்றும் சபரீசன் என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்….
மத்தியில் ஆட்சியில் இருந்தால் 1லட்சத்து 70 ஆயிரம்கோடி மாநிலத்தில் ஆட்சியில் இருந்தால் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி.. இதுவல்லவா திராவிட மாடல் ஆட்சியின் சாதனை…
உலகின் எந்த நாட்டிலும் இல்லாதவகையில் ஆசியாவிலேயே மிகப்பெரும் பணக்கார அரசியல்வாதி குடும்பம் என்று பேரும் புகழும் பெற்று விளங்குவது திமுகவின் முதல் குடும்பம்.. அட அதுதான் கருணாநிதி குடும்பம் …… அப்பாவிற்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறார் என்று ஒரு சொலவடை உண்டு… அதற்கு தகுந்த சான்றே இந்தக்குடும்பம்தான்.. தாத்தா 8 அடி பாய்ந்தால் பேரனும், பேத்தியின் கணவரும் 16 அல்ல 160 அடி பாய்ந்திருக்கின்றனர்… ஆம்…. ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாயை லபக்கி இருக்கிறார்கள் அமைச்சர் உதயநிதியும், சபரீசனும்… ஒரு மாநிலத்தின் நிதியமைச்சரே தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக புலம்பித்தவிக்கும் செய்தி இது… அதுவும் ஆளும் திமுகவின் நிதிஅமைச்சரையே இப்படி புலம்ப வைத்துள்ள செய்தி…
அடேயப்பா… ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடியை சம்பாதித்திருக்கிறார்களா? என்று வாயைப் பிளக்க வேண்டாம்… இதெல்லாம் வெறும் சாம்பிள் தான்…இன்னும் இன்னும் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்களை கொள்ளையடித்து வைத்திருக்கிறார்கள்.. இன்னும் கொள்ளையடிக்க ப்ளான் செய்திருக்கிறார்கள் என்பதை நினைத்தால் 2 நிமிடம் நமக்கு தலையே சுற்றிவிடும்… இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் பூதாகரமாகிவிட்டவுடன், உடனடியாகப் பாய்ந்தது ஐடி ரெய்டு… ஜி ஸ்கொயர் நிறுவனம் சம்பந்தப்பட இடங்களிலும், திமுக எம்எல்ஏ மோகனின் மகன் கார்த்திக் மற்றும் இன்னபிற திமுகவினர் சம்பந்தப்பட்ட இடங்களிலும் ரெய்டு அனல் பறக்கிறது… திமுகவுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைங்கோ…. என்று உடனடியாக சம்மனே இல்லாமல் ஆஜராகியிருக்கிறது ஜி ஸ்கொயர் நிறுவனம்… “அடேங்கப்பா விளக்கமாக” அல்லவா இருக்கிறது இது… ரெட் ஜெயண்ட்க்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்கிறார்கள்… ஜி ஸ்கொயருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள் உதயநிதியும் சபரீசனும் .. என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என்றல்லவா இருக்கிறது..
வெளியில் தெரிந்த ஒரு சில நிறுவனங்களின் மூலம் கொள்ளையடித்த காசே இவ்வளவு என்றால், கண்ணுக்குத்தெரியாத திமுகவினரின் குடும்ப உறுப்பினர்களின் நிறுவனங்கள் மூலம் எவ்வளவு பணம் கொள்ளையடித்திருப்பார்கள்? ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்றால், ஆட்சி முடியும்போது எத்தனை லட்சம்கோடிகள் டார்கெட் வைத்துள்ளது ஸ்டாலின் குடும்பம்? பிடிஆர் பேசிய ஆடியோவால்தான் ஜிஸ்கொயர் நிறுவனத்தில் ஐடி ரெய்டா? ஸ்டாலின் குடும்பத்தைப் பற்றிய ரகசியங்களை வெளியே கசியவிட்ட பிடிஆரை என்ன செய்யப்போகிறது திமுக குடும்பம்? தமிழகத்திற்கு புதிய நிதியமைச்சர் உருவாகப்போகிறாரா? உண்மையை வெளிக்கொண்டுவந்த பிடிஆரை என்னசெய்யப்போகிறது திமுக என்பதுதான் இந்த இடத்தில் ஆயிரத்தெட்டு சந்தேகங்களை கிளப்புகிறது.