இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் குரலை முடக்கி, ஜனநாயகப் படுகொலை செய்கிறதா திமுக அரசு?

சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வுகளை நேரலை செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்த திமுக, எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது மட்டும் நேரலையை நிறுத்தி, எதிர்க்கட்சியின் குரலை முடக்கி, ஜனநாயகப் படுகொலை செய்வது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

சட்டப்பேரவை என்ன ஸ்டாலின் வீடா? அல்லது திமுகவின் அலுவலகமா? யார் பேசவேண்டும் – யார் பேசக்கூடாது என்று காழ்ப்புணர்ச்சி காட்ட? ஜனநாயகத்தின் அடிநாதமான சட்டப்பேரவையிலேயே எதிர்க்கட்சியின் குரல் ஒலிக்கக்கூடாது என வஞ்சம் வைத்து பழிவாங்கிக்கொண்டிருக்கிறது இந்த விடியா திமுக அரசு… ஆம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமி பேசும்போது மைக்கை ஆஃப் செய்து தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்டிருக்கிறது திமுக… இங்கு பேசாமல் எங்கு பேசுவது? வேண்டுமென்றால் எல்லா எம்எல்ஏக்களையும் வண்டலூர் பூங்காவிற்கு வரவழைத்து அங்கு பேசுவோமா? என்று கேட்டால் தன் முகத்தை எங்கே வைத்துக்கொள்ளும் இந்த அரசு?

இத்தனை கொடுமைகளையும் மீறி, எழுந்து மக்கள் பிரச்சனைகளைப் பேசினால், உடனே நேரலையைக் கட் செய்வது… எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு முறையான இருக்கை கொடுங்க என்று கேட்டால், அதை கேட்டும் கேட்காதவாறு காது குடைந்துகொண்டிருக்கிறதா இந்த அரசு? இப்படி திமுகவின் காழ்ப்புணர்ச்சி அரசியலை கழுவிக் கழுவி ஊற்றிக்கொண்டிருக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்..

சட்டமன்றத்தின் மாண்பையும், ஜனநாயகத்தையும் காக்கத்தான் சபாநாயகர் இருக்கிறார். ஆனால், நம்மூரு சபாநாயகர் அப்பாவுவோ, ஏதோ, விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும் செய்தித்தொடர்பாளர்போல, எல்லாரையும் கலாய்ப்பது, காலை வாறி விடுவது என்று ஃபன் செய்து கொண்டிருக்கிறார்.. சரி இருக்கட்டும், ஆனால், தன் ஜனநாயக் கடமையில் இருந்து தவறலாமா? அதிமுக எம்எல்ஏக்கள் 1 நிமிடம் பேசினால் அதற்கு அப்பாவு 5 நிமிடம் பேசுகிறார். அவர் பேச்சு மட்டுமே மக்களை அடைகிறது… கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தால் அனுமதிக்காமல் அராஜகம் செய்து… அதிமுக எம்எல்ஏக்கள் ஏதாவது பிரச்சனையைப் பேசினால், அதை அவைக்குறிப்பில் இருந்தே நீக்குவது.. இதுதான் சபாநாயகரின் பணிகளா?

எதிர்க்கட்சித்தலைவர் மக்களை சென்று அடைந்துவிடுவார் என்று பொறாமை கொள்கிறாரா ஸ்டாலின்? நடுநிலை தவறுகிறாரா சபாநாயகர் அப்பாவு ? என்ற கேள்விகளுக்கு திமுக வேண்டுமானால் பதில் சொல்லாமல் தப்பிக்கலாம். ஆனால் மக்களுக்கு அதற்கான பதில் மிக தெளிவாகவே தெரியும்.

Exit mobile version