நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக சென்னையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
விடியா ஆட்சியில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகள் என பல்வேறு இடங்களில் இந்த லாட்டரி சீட்டு விற்பனையால் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில் நியூஸ் ஜெ செய்தியின் எதிரொலியால் சென்னை வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்த 4 செல்போன்கள், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், பில் புத்தகம் ,15 ஆயிரத்து 750 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.
Discussion about this post