என்னது..! இந்தியாவில் சாலை விபத்தை தடுக்க புது டெக்னாலஜியா?.. வாருங்கள் பார்ப்போம்!

சாலை விபத்துகளை தடுப்பதற்காக புதிய டெக்னாலஜியை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன. அந்த வகையில் கால்களை ஊன்றாமலேயே பைக்கை நிறுத்தும் செல்ஃப் பேலன்சிங் எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் பயன்பாடும் பலடமடங்கு அதிகரித்து, அதன் காரணமாக எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதே நேரம், உலகிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் நாடாகவும், அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடாகவும் இந்தியா மாறி இருக்கிறது. இதனை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபடியாக, புதிய டெக்னாலஜி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அதன் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. கால்களை ஊன்றாமலேயே பைக்கை நிறுத்தும், செல்ஃப் பேலன்சிங் எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் தான் அது. அந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
மோட்டார் சைக்கிள்களால் ஏற்படும் உயிரிழப்புகளை பூஜ்ஜியமாக குறைக்கும் விதமாக தனியார் நிறுவனம் ஒன்று தனது R25 பைக்கில் செல்ஃப் பேலன்சிங் சிஸ்டமை பரிசோதனை செய்து வருகிறது. அதாவது 5 கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் நாம் பைக்கை ஓட்டும்போது பைக்கை பேலன்சிங் செய்ய வேண்டியது கட்டாயமாகும். இல்லையன்றால் கீழே விழுந்து காயமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகத்தான் செல்ஃப் பேலன்சிங் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்பக்க சஸ்பென்சனுக்கு கீழ் இரண்டு புறமும் இரண்டு மின் மோட்டார்களை பொருத்தி, குறைவான வேகத்தில் பைக் செல்லும் போது பைக்கின் எந்தப் பக்கம் சாய்கிறதோ அதற்கேற்றார் போல பைக்கை பேலன்ஸ் செய்து கொள்ளும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த தொழில்நுட்பம் ஆராய்ச்சி அளவில் மட்டும்தான் இருக்கிறது. எனினும் இந்த டெக்னலாஜியை முழுமையாக சோதித்து 2050க்குள் இருசக்கர வாகனங்களால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலுமாக தவிர்க்கும் நோக்கில் தொழில்நுட்பத்தை நடைமுறைப் படுத்த முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

– பாலாஜி, செய்தியாளர்.

Exit mobile version