இலங்கையின் புதிய சபாநாயகராக ராஜபக்ச கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்த்தனே பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கையில் ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த மூன்றாம் தேதி பதவியேற்றுக் கொண்டது. இதில், ராஜபக்ச கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்த்தனேவும் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், இலங்கையின் புதிய சபாநாகராக தினேஷ் குணவர்த்தனே பொறுப்பேற்றுள்ளார். தற்போதைய சபாநாயகராக கரு.ஜெயசூர்யா உள்ள நிலையில், தினேஷ் குணவர்த்தன பெயரும் அறிவிக்கப்படுள்ளது. ஏற்கனவே, ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச இருவரும் பிரதமராக உள்ள நிலையில், தற்போது இரு சபாநாயகர்கள் பதவியில் உள்ளது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post