நீட் விவகாரம் பற்றி எப்போதெல்லாம் கேள்வி எழுப்பப்படுகிறதோ, அப்போதெல்லாம் புது புதிதாக கதை சொல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் வாரிசு அமைச்சர். அந்த வகையில் அவர் உருட்டிய புதிய உருட்டு ஒன்று திகைக்க வைத்திருக்கிறது. அது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கடல் எப்ப வத்த, நான் எப்ப கருவாடு தின்னனு… குடல் வத்திப்போன கொக்கு போல தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் தமிழக மாணவர்கள்… எல்லாம் நீட் தேர்வு விவகாரம்தான்… நீட் தேர்வை ரத்து செய்துவோம் என சொல்லி ஆட்சிக்கு வந்த விளம்பரகும்பல், ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடம் ஆகியும் சொன்னதை செய்யவில்லை. எப்போது கேட்டாலும் புதிது புதுதாக கதை சொல்கிறார் வாரிசு அமைச்சர் உதயநிதி. இந்நிலையில் அடுத்த நீட் தேர்வு எப்போது நடைபெறும் என்கிற தேதியும் தகவலும் வெளியாகியுள்ளது. இந்தமுறையாவது சொன்னதை செய்து நீட் தேர்விலிருந்து விலக்கை பெற்றுத்தருவாரா விடியாலார் ? என்று ஆவலோடு காத்திருக்கின்றனர் மாணவர்கள். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாத வாரிசு அமைச்சர் இப்போது புதிதாக ஒரு உருட்டு ஒன்றை உருட்டி இருக்கிறார்.
மதுரையில் நடந்த திமுக விழாவில் பேசிய வாரிசு அமைச்சர், நீட் தேர்வை ஒழிக்க கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்த இருப்பதாகவும், அந்த இயக்கத்தில் 50 லட்சம் பேர் கையெழுத்து போடுவார்கள் என்றும் சொன்னார். ஆட்சிக்கு வருவதற்கு முன், ஸ்டாலின் கையெழுத்து போடுவார் என்றும் நீட் தேர்வு ரத்தாகும் என்றும் சொன்னவர். இப்போது மக்களிடம் கையெழுத்து கேட்கிறார். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லி ஆட்சி அதிகாரத்தை பிடித்து பதவி தரும் தைரியத்தில் பணம் சம்பாரிப்பவர்கள் மக்களா ? நீங்களா ? மக்கள் எதற்காக கையெழுத்திட வேண்டும் ? சரி கையெழுத்து போட்டால் நீட் ஒழிந்து விடுமா ? எத்தனை காலத்திற்கு இப்படியே ஏமாற்றப்போகிறீர்கள் என்று பொதுமக்கள் கொந்தளித்துக்கொண்டு உள்ளனர்.
நீட் என்கிற ஒரே ஒரு தேர்வை வைத்து எத்தனை உருட்டுக்களை உருட்டி இருக்கிறார் இந்த உதயநிதி …
((உருட்டு நம்பர் 1)) முதலில் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்றார்
((உருட்டு நம்பர் 2)) பின்னர் நீட் தேர்வு ரகசியம் தெரியும் என்றவர் ரகசியம் என்ற பெயரில் ஏதேதோ உளறினார்
((உருட்டு நம்பர் 3)) அதன் பிறகு மத்தியிலும் திமுக கூட்டணி ஆட்சி வந்தால்தான் நீட் ஒழியும் என்றார்.
((உருட்டு நம்பர் 4)) ஒரு மாணவரும் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட உடன் அதை அரசியலாக்கி எப்படியாவது தேர்தலில் ஓட்டு வேட்டை நடத்த வேண்டும் என உண்ணாவிரதமிருந்தார்.
((உருட்டு நம்பர் 5)) நீட் விவகாரத்தில் தானும் தன் தந்தையும் சேர்ந்து ஆடும் நாடகம் அம்பலமானவுடன் இப்போது மக்களிடம் கையெழுத்து கேட்கிறார்.
தொடர்ந்து நீட் விவகாரத்தில் விளம்பரகும்பல் எப்படியெல்லாம் பித்தலாட்டம் செய்கிறது, தேர்தலில் ஓட்டு வாங்கத்தான் மாணவர்களின் வாழ்வை சூனியமாக்கி கொண்டிருக்கிறது என்பதற்கு உதயநிதியின் இந்த உளறல் பேச்சுக்களே சாட்சி… கையெழுத்து இயக்கமாம் கையெழுத்து இயக்கம்… போராட்டத்திற்கு முடிவு சொல்ல வழி தெரியாமல் போராடிக்கொண்டே இருப்போம் என்கிறது திராவிடமாடல்…
உதயண்ணே… உதயண்ணே… உங்களால கையெழுத்து போட முடியாது… போடவும் மாட்டீங்கன்னு ஜனங்க தெரிஞ்சிக்கிட்டாங்க… யாரு கையெழுத்து போடுவாங்களோ.. அவங்களுக்கு ஓட்டு போடவும் தயாராகிட்டாங்க… சும்மா அனத்தாதீங்கண்ணே !
Discussion about this post