ஆசிரியர்கள், பயிற்சி நிலையங்களுக்கு இன்று முதல் புதிய தளர்வுகள்… மேலும் எதற்கெல்லாம் அனுமதி?

தமிழ்நாட்டில் ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நியைலில், இன்று முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று பணிபுரிய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட நிர்வாக பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று பணிபுரிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தொழில் பயிற்சி நிலையங்கள், தட்டச்சு – சுருக்கெழுத்து நிலையங்கள் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.

திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் கூட்டங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் செயல்பட தடை நீடிக்கிறது.
திருமண நிகழ்வுகளில் 50 பேருக்கும், இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version