மேட்டூரில் வரும் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் வகையில் 565 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சி மைதானத்தில் தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொருட்காட்சியை முதலமைச்சர் துவக்கி வைத்தார். தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சாதனைகளை விளக்கும் அரங்குகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முடிவுற்ற 19 திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர் முதலமைச்சர் மேட்டூரில் வரும் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும் கோதாவரி காவிரி இணைப்புத் திட்டத்தின் மூலம் 125 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.