ரயிலில் பயணிகளின் விவரங்களை கையடக்க கணினி மூலம் டிக்கெட் பரிசோதகர்கள் தெரிந்துகொள்ளும் புதிய திட்டத்தை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷ்ரேஸ்தா தொடங்கி வைத்தார்.
ரயில்களில் பயணிகளின் விவரங்கள் அடங்கிய பேப்பர் சார்ட் கொண்டு பயணிகளின் வருகையை டிக்கெட் பரிசோதகர்கள் உறுதி செய்து வந்தனர். தற்போது, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் பேப்பர் முறையை மாற்றி கையடக்க கணினி மூலம் பயணிகளின் விவரங்களை உறுதிசெய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷ்ரேஸ்தா தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கையடக்க கணினி, முதல்கட்டமாக சென்னை முதல் மைசூர் வரை செல்லும் சதாப்தி ரயில்களில் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.