2-ம் நாளாக இன்றும் மக்களவை புதிய உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.
17-வது மக்களவை முதல் கூட்டத்தொடர் துவங்கிய நிலையில், முதலில் பிரதமர் நரேந்திர மோடி எம்.பி ஆக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் எம்.பி-க்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக புதிய எம்.பிக்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை மக்களவை சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. அதன்பின், வரும் 20 ஆம் தேதி இரு அவைகளின் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.