2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய அரசின் நிதியமைச்சர் முதல்நாள் கூட்டத்தில் வெற்றிகரமாக தாக்கல் செய்தார். இதில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாக வருமான வரியின் உச்சவரம்பானது 5 லட்சத்திலிருந்து 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரி செலுத்தும் மக்களுக்கு எவ்வளவு ரூபாய் மிச்சமாகும் என்று பார்க்கலாம்.
புதிய ஆண்டு வருமான வரி விதிப்பு முறையினை முதலில் காணலாம்.
0 – 3 லட்சம் : 0 சதவீத வரி
300000-60000 : 5 சதவீத வரி
600000 -900000 : 10 சதவீத வரி
900000 – 1200000 : 15 சதவீத வரி
1200000 -1500000 : 20 சதவீத வரி
1500000 ரூபாய்க்கு மேல் : 30 சதவீத வரி
பழைய ஆண்டு வருமான வரியின் வரம்பு பின்வருமாறு :
0-2.5 லட்சம் – 0 சதவீத வரி
2.5-5 லட்சம் – 5 சதவீத வரி
5-7.5 லட்சம் – 10 சதவீத வரி
7.5-10 லட்சம் – 15 சதவீத வரி
10-12.5 லட்சம் – 20 சதவீத வரி
12.5-15 லட்சம் – 25 சதவீத வரி
15 லட்சத்திற்கு மேல் – 30 சதவீத வரி
உதாரணத்திற்கு ஒருவரது ஆண்டு வருமானம் 6 லட்சம் என்று எடுத்துக்கொள்வோம். அவர் புதிய வருமான வரி விதிப்பின் படி ஆண்டிற்கு 5 சதவீதம் வரி செலுத்தவேண்டும். அதன்படி ஆண்டிற்கு 30,000 ரூபாய் அவர் வரி செலுத்த வேண்டும். ஆனால் பழைய வருமான வரி விதிப்பின்படி 10 சதவீத வரி செலுத்த வேண்டும். அது ஆண்டு வருமானத்தில் 60,000 ரூபாய் ஆகும். கிட்டத்தட்ட 6 லட்சம் சம்பாதிப்பவர்கள் 30,000 ரூபாய் வரை சேமிக்கலாம். அதேபோல 15 லட்சம் ரூபாய் வருமானம் உள்ள தனிநபர் தற்போது நடைமுறையில் இருக்கும் வருமான வரி விதிப்பின்படி கணக்கிட்டால் 1,87,500 ரூபாய் செலுத்த வேண்டும். இன்று அறிவிக்கப்பட்டு உள்ள மாற்றம் மூலம் வரி செலுத்தும் தொகையில் 20 சதவீதம் பணத்தை மிச்சப்படுத்தி ரூ. 1.5 லட்சம் அல்லது அவரது வருமானத்தில் 10 சதவீதத்தை மட்டுமே செலுத்த வேண்டும் எனப் பட்ஜெட் 2023 அறிக்கையைத் தாக்கல் செய்யும் போது நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.