விளையாட்டுத் துறைக்கு பட்ஜெட்டில் ரூபாய் 3,397 கோடி ஒதுக்கீடு!

2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூபாய் 3,397 கோடி ரூபாய் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 723.97 கோடி ரூபாய் அதிகமாகும். கடந்த ஆண்டு ரூபாய் 3,603.60 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் சீனாவில் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொரோனா காரணமாக ரத்தானதால் 2,673.35 கோடியாக நிதியானது குறைக்கப்பட்டது.

மேலும் விளையாட்டின் மேம்பாட்டிற்கான தேசியத் திட்டமான ‘கேலோ இந்தியா’ திட்டமானது அரசாங்கத்தின் முன்னுரிமைத் திட்டமாக இந்த முறையும் தொடர்கிறது. இந்தத் திட்டத்திற்கு மட்டும் தற்போது ரூபாய். 1,04 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. க்டந்த ஆண்டைவிட இது 439 கோடி ரூபாய் அதிகமாகும். உலகளாவிய விளையாட்டுப் போடிகளான ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போட்டி போன்றவற்றில் சிறந்த பங்களிப்பினை செய்தவதற்காக வீரர்களைத் தயார்ப்படுத்துவதற்உ இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

இதைத்தவிர, விளையாட்டு வீரர்களுக்கான தேசிய முகாம்கலை நடத்துதல், விளையாட்டி வீரர்களுக்கு உள்கட்டமைப்பு வழங்குதல், பயிற்சியாளர்கள் நியமனம், மேலும் விளையாட்டு உள்கட்ட்மைப்பை பராமரித்தல் போன்றவற்றை கவனித்து வரும் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு, பட்ஜெட் ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்கீரு சுமார் 36.09 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதற்கு ரூ.749.43 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது 785.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டிற்கான கூட்டமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு 325 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு அங்கீகாரத்துடன் செயல்படும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமைக்கு 21.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்திற்கு 19.50 கோடி ருபாயும், தேசிய விளையாட்ட்ய் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு ரூபாய் 13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சேர்த்து 3,397 கோடி ரூபாய் நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version