விவசாயிகளுக்கான கடன் தொகையை 20 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய அவர், அடுத்த ஓராண்டுக்கு 80 கோடி குடும்பங்களுக்கு தேவையான இலவச தானியங்கள் தயாராக இருப்பதாகவும், கொரோனா காலத்தில் 80 கோடி குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கி வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், பசுமை எரிசக்தி உற்பத்திக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும் என்றும், ஐசிஎம்ஆர் நிலையங்களை தனியாரும் பயன்படுத்தலாம் எனவும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார். 11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும், விவசாயிகளுக்கான கடன் தொகை 20 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளத்துறைக்கு 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார்.

Exit mobile version