நிதிநிலை அறிக்கைப் பற்றின சுவாரஸ்யத் தகவல்கள்!

1951 ஆம் ஆண்டிலிருந்து நிதிநிலை அறிக்கையானது இந்தியாவில் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதில் சில சுவாரஸ்யத் தகவல்களைப் பின்வருமாறு காணலாம்.

1955வரை நிதிநிலை அறிக்கையானது ஆங்கிலத்தில் மட்டும்தான் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தது. பிறகு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இருமொழிகளிலும் அறிமுகம் செய்யலாம் என்று கூறப்பட்டது. இன்று நிர்மலா சீதாராமன் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். இதற்கு முன் நிதிநிலை அறிக்கையை முதன்முதலில் தாக்கல் செய்த முதல்பெண் முன்னால் பிரதமர் இந்திராகாந்தி ஆவார். இவர் 1970ல் முதன்முதலாக நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்தார்.

கறுப்பு நிதிநிலை அறிக்கை என்ற ஒரு அறிக்கையினை 1973ஆம் ஆண்டு இந்திராகாந்தியின் ஆட்சிகாலத்தில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த்ராவ் சவான் தாக்கல் செய்தார். அப்போது இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தது, கிட்டத்தட்ட நிதிப் பற்றாக்குறை ரூ.550 கோடியாக இருந்தது. நிதிநிலை அறிக்கையிலேயே மிகவும் குறைவான சொற்களைப் பயன்படுத்தியவர் ஹிருபாய் படேல் ஆவார். 1977ல் அவர் ஆற்றிய உரையின் சொற்கள் மொத்தமே 800 தான். அதிகச் சொற்களைப் பயன்படுத்திய உரை என்பது 1991ல் நிதியமைச்சராக இருந்த மன்மோகன்சிங்கின் உரை தான். இந்த உரை 18,650 சொற்கள் கொண்டது. முதன்முதலில் காலை 11 மணிக்கு நிதி அறிக்கையை தாக்கல் செய்தவர் யஷ்வந்த் சின்ஹா ஆவார். பிப்ரவரி முதல் நாளில் தாக்கல் செய்வதை அறிமுகம் செய்தவர் 2017ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி ஆவார்.

1997ல் ப. சிதம்பரம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையானது கனவு நிதிநிலை அறிக்கை என அழைக்கப்பட்டது. 40% ஆக இருந்த தனிநபர் வருமான விகிதம் 30% ஆக குறைக்கப்பட்டது. உள்நாட்டு நிறுவனங்களுக்கான வருமான வரி 35% குறைக்கப்பட்டது.  சுங்கவரி 40% ஆகக் குறைக்கப்பட்டது. அதிக முறை நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்த நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் ஆவார். கிட்டத்தட்ட 10 முறை நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ளார். நீண்ட நிதிநிலை அறிக்கை உரையென்பது நிர்மலா சீதாராமனால் முன்மொழியப்பட்டது ஆகும். இந்த உரை 2020ஆம் ஆண்டுவாக்கில் பேசப்பட்டது ஆகும். அவ்வுரையானது 2 மணி நேரம் 42 நிமிடங்கள் வரை நீண்டது.

திருப்புமுனை நிதிநிலை அறிக்கையென்பது இந்தியாவின் பொருளாதாரத்தின் நிலையினையே மாற்றி அமைத்தது. அதனை வெளியிட்டவர் மன்மோகன்சிங் ஆவார். 1991ஆம் ஆண்டு இந்த அறிக்கை முன்மொழியப்பட்டு தாராளமயமாக்கல், தனியார்மையமாக்கல், உலகமயமாக்கல் தன்மைக்குள் இந்திய பொருளாதாரம் நுழைந்தது. தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்ல நிதிநிலை அறிக்கையினை அறிமுகம் செய்து வைத்தார். 2021-2022 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்தார்.

Exit mobile version