காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகியது நாடகம் என பாஜக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதாகவும் இனியும் நீண்ட நாட்களுக்கு அப்பதவியில் நீடிக்க முடியாது எனவும் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வென்று மீண்டும் படுதோல்வியை சந்தித்தது.
காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் கூட ராகுல் தோல்வி அடைந்தார். எனவே, தோல்விக்கு முழு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் அறிவித்தார். இதனை அக்கட்சியினர் ஏற்காத நிலையில் ராகுல் தனது முடிவில் உறுதியாக இருப்பதால் காங்கிரசில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ராகுல் தனது டுவிட்டர் கணக்கில், ‘காங்கிரஸ் தலைவர்’ என குறிப்பிட்டு வந்தார். தற்போது அதில் எம்.பி, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இடைக்கால தலைவராக மோதிலால் வோரா தேர்வு செய்யப்பட்டதாக வந்த தகவலை மோதிலால் வோரா மறுத்துள்ளார். இந்த நிலையில் ராகுல் ராஜினாமா ஒரு நாடகம் என பாஜக விமர்சித்துள்ளாது
Discussion about this post