ஆரணி-கண்ணமங்கலம் புதிய வழித்தடத்தில் அரசுப்பேருந்து சேவை துவக்கம்

அத்திமலைப்பட்டு வழியாக ஆரணி – கண்ணமங்கலம் புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவையை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடந்த மாதம் அத்திமலைப்பட்டு கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அரசு விழாவில் பங்கேற்றார். அப்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆரணியில் இருந்து அத்திமலைப்பட்டு வழியாக கண்ணமங்கலம் செல்லும் அரசுப்பேருந்து சேவையை வேண்டி கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவை பரிந்துரைத்தார்.

இதையடுத்து அத்திமலைப்பட்டு வழியாக புதிய வழிதடத்தில் அரசுப்பேருந்து சேவை இயக்க முடிவு செய்யப்பட்டு, பேருந்து ஒதுக்கப்பட்டது. இதையடுத்து நடந்த புதிய பேருந்து சேவை துவக்க விழாவில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கொடியசைத்து துவக்கி வைத்தார். இதன்மூலம் அத்திமலைப்பட்டு, மோட்டூர், ஒண்ணுபுரம், துருகம் உள்ளிட்ட சுமார் 10 கிராம மக்கள், இப்பேருந்து சேவையால் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version