கடலூர் மாவட்டம் பூமணவெளி கிராமத்தில் சேதமடைந்த பழைய பாலத்திற்கு பதிலாக, புதிய பாலம் அமைத்துக் கொடுத்த தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முரட்டுவாய்க்காலில் இருந்த குறுகிய பழைய பாலம் பலவீனம் அடைந்ததால், புதிய பாலம் அமைத்து தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற தமிழக அரசு, 1 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய பாலம் அமைக்க உத்தரவிட்டது.
தற்போது பணிகள் நிறைவடைந்து, புதிய பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்கும் வகையில் புதிய பாலம் அமைத்து தந்த தமிழக அரசிற்கு அந்தப் பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.