காட்டுப்பன்றிகள் விளைநிலத்தில் நுழைவதை தடுக்கும் வகையில், நிலத்தை சுற்றி பலவண்ண நிறத்தில் சேலைகளை வேலிகளை போல் கட்டியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் மரவள்ளி பயிரிட்டுள்ளனர். வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து மரவள்ளி பயிர்களின் வேர்பகுதியை தோண்டி நாசப்படுத்துவதால் விவசாயிகள் கவலையடைந்தனர். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த முடியாததால், நஞ்சப்பகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள விவசாயிகள் மரவள்ளி பயிரிடப்பட்டுள்ள நிலத்தை சுற்றிலும் பல வண்ண நிறங்களில் உள்ள சேலைகளை வேலிபோல் கட்டியுள்ளனர். எனவே, வேலி போல் சேலைகள் கட்டப்பட்டுள்ளதால், பன்றிகளை நிலத்திற்குள் நுழைவதில்லை என்றும், காட்டுப்பன்றிகளை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post