பெண்களை தவறாக சித்தரித்து அதிக அளவில் ஆபாச நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதாக நெட்ஃப்ளிக்ஸ், ஹட்ஸ்டார் உள்ளிட்ட ஆப்களுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
’நீதிக்கான உரிமைகள் அறக்கட்டளை’ என்னும் தொண்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் ஆபாசமாக வெளிப்படுத்தும் விதமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பெண்கள் தவறான முறையில் சித்தரிக்கப்படுவதாகவும்,
இணையத்தில் வெளியாகும் நிகழ்ச்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கபட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதைச் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் நீதித்துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு மீதான விசாரணை விரைவில் எடுத்துக் கொள்ளப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.