நேபாள நாட்டின் புதிய அதிபராக ராம் சந்திர பவ்டல் தேர்வு!

நேபாள அதிபராக ராம் சந்திர பவ்டல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபராக இருந்த பித்யா தேவி பண்டாரியின் பதவிக்காலம் மார்ச் 13ஆம் தேதியுடம் முடிவடையவுள்ள நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. நேபாளி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திர பவ்டல், 7 கட்சிகள் ஆதரவுடன் அதிபர் தேர்தலில் போட்டியிட்டர். இவரை எதிர்த்து சி.பி.எம். (யு.எம்.எல்.) சார்பில் சுபாஷ் சந்திர நெம்பவாங் போட்டியிட்டார். இதில், மொத்தமுள்ள 882 உறுப்பினர்களில் 566 பேர், பவ்டலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பெரும்பான்மை பெற்ற ராம் சந்திர பவ்டல் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். துணை அதிபர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

 

 

Exit mobile version