நீட் நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே மாணவர்களின் கருத்துக்களை அரசு கேட்டறிய வேண்டும். இது அரசின் கடமை என்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்தார். மேலும் பேசிய அவர், நீட் தேர்வு தொடர்பாக அதிகரித்து வரும் வழக்குகள், இந்திய மருத்துவக் கல்வியில் சீர்திருத்தம் அவசியம் என்பதை உணர்த்துகிறது. நாட்டின் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. அவர்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக சட்டம் இயற்றுபவர்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள், சமுதாய தலைவர்கள் ஒன்றிணைந்து ஆலோசித்து உரிய தீர்வு காண வேண்டும் என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
Discussion about this post