நாளை நீட் தேர்வு.. உதயநிதி சொன்ன இரகசியம் என்னாச்சு!

இந்தியா முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெறுகிறது.மருத்துவ படிப்பதற்கான தேசிய தகுதித் தேர்வான நீட் தேர்வின் மூலம் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா ,யுனானி ஆயுர்வேதா, மற்றும் ராணுவ மருத்துவ கல்லூரிகளில் பயிலும் பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது நடத்தப்படுகிறது.

இந்த படிப்புகளுக்கான நீட் தேர்வானது நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்விற்காக இந்தியாவில் மொத்தம் 499 நகரங்களிலும் இந்தியாவை தவிர வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.இந்திய நேரப்படி நாளை மதியம் 2:00 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறும் இந்த தேர்வினை எழுதுவதற்காக 18,72,341 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.கூடுதல் விவரங்களை அறிய மாணவர்கள் www.nta.ac.in என்கிற இணையதளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம், அழிப்போம் என்று சவடால் விட்ட திமுகவின் வாக்குறுதி என்னவாகி விட்டது என்று நீட் எழுதப்போகும் மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டு வருகிறார்கள். இதற்கு ஒருபடி மேலே போய் நீட்த் தேர்வினை ஒழிப்பதற்கான ரகசியம் தனக்குத் தெரியும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்திருந்தார். அது என்ன ரகசியம் என்று அவரிடம் கேட்டால், எதிர்ப்பு தெரிவிப்பதுதான் அந்த ரகசியம் என்று கூறுகிறார். திரைப்படமொன்றில் இயக்குநர் சுந்தர்ராஜன் ஒருவரிடம் வெள்ளைக் காகிதத்தைக் கொடுத்து, அதில ஒன்னுமில்ல கீழ போட்ரு என்று நக்கலாக சொல்வார். உதயநிதியையும் திமுகவையும் நினைத்துப் பார்த்தால் அந்தக் காட்சிதான் கண்முன் வந்து தொக்கி நிற்கிறது.

Exit mobile version