நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற விடியா திமுகவின் பொய்யான வாக்குறுதியால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே 7ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நீட்டை ரத்து செய்ய தொடர்ந்து முயற்சித்து வருவதாக விடியா அரசு வெற்று விளம்பரம் செய்து வருகிறது. திமுகவின் இந்த வாக்குறுதியை நம்பிக்கொண்டிருந்த நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஏமாந்துபோயிருக்கின்றனர். இதன்விளைவாக நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்தாண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 17 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களில் 14 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். இந்நிலையில் இந்த ஆண்டு சுமார் 14 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே தேர்வுக்கு விண்ணத்திருந்த நிலையில், தேர்வெழுதப்போகும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவை நனவாக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு நாடு முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளதால், மருத்துவ சீட்டுக்கு கடும் போட்டாப்போட்டி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் விடியா அரசு மெத்தனமாக இருப்பதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.