திமுக இப்போ ஆட்சியில இருக்கிறதுக்கு அவங்க காட்டுனா ஜிகினா வாக்குறுதிகள்ல முக்கியமானது நீட்தேர்வு ரத்துதான்… தேர்தல் பிரசாரத்துல எங்க போனாலும் அதையேத்தான் சொல்லிக்கிட்டு இருந்தாரு கோபாலபுரத்து சின்ன பகவதி…. சாரி… சின்ன தளபதி….
அதுமட்டுமில்லாம கிடைக்கிற மேடையில எல்லாம் திமுகவ ஆட்சிக்கட்டில உக்கார வச்சிங்கன்னா, நீட் தேர்வ ரத்து செஞ்சிடுவோங்கிறது தான் அவரோட ஹைலைட் பேச்சாவே இருந்துச்சு…
3 வருஷத்துல நீட் தேர்வால அனிதா தொடங்கி 14 பேர் உயிரிழந்ததா எங்க போனாலும் பெயர் விவரத்தோட பதிவும் பண்ணுனாரு உதயநிதி.
நீட் தேர்வ ஒழிக்கிற ரகசியம் எங்களுக்குத்தான் தெரியும்னு உருட்டி உருட்டியே ஆட்சியப் பிடிச்சி 2 வருஷம் ஆச்சு… ஆனா இன்னவரைக்கும் நீட்ட ஒழிக்கவே இல்ல… கேட்டா சட்டமன்றத்துல தீர்மானம் நிறைவேத்திட்டோம்…. ஆளுநர்தான் கையெழுத்து போட மாட்டேங்கிறாருனு, ஒண்ணாங்கிளாஸ் புள்ள, டீச்சர் அவன் என்னிய கிள்ளிட்டான்னு சொல்ற மாதிரியே சொல்லிக்கிட்டு இருக்காரு…
ஆனா திமுகவோட 2 ஆண்டு ஆட்சியில நீட் தேர்வ ஒழிக்க முடியாததால தற்கொலை செஞ்ச மாணவர்களோட எண்ணிக்க 21ஆ அதிகரிச்சிருக்கு… கூடவே ஒரு தந்தையும் தன்னோட உயிரிழந்திருக்காரு.. இதையும் உதயநிதியே சொல்லியிருக்காரு…
திமுக ஆட்சிக்கு வந்தும் இந்த நீட் உயிர்ப்பலி தொடருதுன்னா தேர்தலப்ப சொன்ன ரகசியம் என்னாச்சுன்னு கேள்வி எழுப்பத்தானே செய்யும்… அப்போதைய ஆளும்கட்சியான அதிமுக கூட, சரி அந்த ரகசியத்த சொல்லுங்க… மாணவர்கள் நலனுக்காக நிச்சயம் அத செய்வோம்னு கேட்டப்போ கூட, நீட் ரகசியம் இதுதான்னு ஏடாகூடாமாத்தான் வாய தொறந்தார் உதயநிதி…
அன்னைக்கு சொன்ன அதே வெட்கம், மானம், சூடு, சுரணை இன்னைக்கு ஆட்சியில இருக்குற திமுகவுக்கு இருக்கோ இல்லையான்னு தெரியல… ஆனா நீட் ரகசியம் இதுதான்னு வேற ஒண்ண சொல்லியிருக்காரு உதயநிதி…
கல்வி உரிமைக்காக குரல் கொடுக்கிறதும், சட்டப் போராட்டமும்தான் நீட் தேர்வு ரகசியம்னு சொல்றதுக்கு உதயநிதிக்கு எதுக்கு ரெண்டு வருஷமாச்சுன்னு தெரியல… இதே சட்டப் போராட்டத்த அதிமுகவும் முன்னெடுத்துட்டு இருக்கிறது திமுகவுக்கு தெரியலையா அல்லது முழு பூசணிக்காய சோத்துல மறைக்கிறாங்களான்னு தெரியல…
இந்த விடியா ஆட்சியால நீட்ட ரத்து செய்ய முடியாதுன்னு மக்கள் கொந்தளிக்க ஆரம்பிச்சதும் பெயரளவுக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தையும் வாரிசு தலைமை தாங்கி நடத்தியிருக்காரு. இது தொடர்பாக வேறொரு நிகழ்ச்சியில செய்தியாளர்கள் கேட்டதுக்கு, எங்கக்கிட்டத்தானே கேள்வி கேக்குறீங்க… நீட்ட எதிர்க்கிற அதிமுகவும் எங்ககூட கலந்துக்க வேண்டியதான்னுலாம் சொல்லியிருந்தாரு…
இன்னைக்கு இப்படி சால்ஜாப்பு சொல்லுற உதயநிதி, அன்னைக்கு நீட் ரகசியத்த சொல்லுங்கன்னு கேட்டதுக்கு வெட்கம், மானம்னு வசனம் எல்லாம் பேசுனது ஏன்?
எங்களுக்கு பதவி முக்கியமில்லன்னு மேடையில முழங்குற நீங்க, எங்களால தேர்தல்ல வாக்குறுதி கொடுத்த மாதிரி நீட்ட ரத்து செய்ய முடியலன்னு ஆட்சிய விட்டு வெளியேறுற தில்லு இருக்கா… மக்களுக்கு இப்பத் தெரியும்… நீட்ட நிறுத்துற சக்தி அதிமுகவுக்கு மட்டும்தான்னு.. வாயில வடை சுடுறது மட்டும்தான் திமுகன்னு!