குழந்தைகளின் அடிப்படை தேவை விளையாட்டு – பி.வி.சிந்து

குழந்தைகளின் அடிப்படை தேவை விளையாட்டு என பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் பள்ளி குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டத்தை பி.வி. சிந்து அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் பேசிய அவர், பேட்மிண்டன் விளையாட்டு குறித்த நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிந்து, விளையாட்டும், கல்வியும் குழந்தைகளுக்கு சரிசமமாக தேவை என கூறினார். பெற்றோர்கள் குழந்தைகள் விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறிய அவர், 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version