தாம்பரம் அருகே பாலிடெக்னிக் மாணவர்களுக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மாணவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற மாணவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் தனது நன்பர்களுடன் இன்று தனி அறையில் பேசிக்கொண்டிருந்தபோது அங்கிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி முகேஷ் உயிரிழந்தார். முகேசைத் துப்பாக்கியால் சுட்ட அவரது நண்பர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வீடியோ கேம் விளையாடும்போது ஏற்பட்ட மோதலே துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
Discussion about this post