டெல்லியில் நாளை தேசிய ஜனநாயக எம்.பி.க்கள் கூட்டம்

நாளை நடைபெறும் தேசிய ஜனநாயக எம்.பி.க்கள் கூட்டத்தில் மீண்டும் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட உள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் அமோக வெற்றியை பெற்றுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பாஜக மட்டும் 303 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்தநிலையில், தேசிய ஜனநாயக எம்.பி.க்களின் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமராக ஒருமனதாக மோடி தேர்வு செய்யப்படுகிறார். இதைத்தொடர்ந்து 26 ஆம் தேதி, குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர உள்ளது. அதன் அடிப்படையில், மோடி தலைமையில் 30 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version