கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பாரம்பரிய நெல் ரகங்களை, இயற்கை முறை விவசாயத்தில் அதிக விளைச்சலை பெற்ற பொறியியல் பட்டதாரிக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி குலோத்துங்கன். இவர் தனது வயலில் வழக்கமான விவசாய முறையை செய்துவந்தார். ஒரு கட்டத்தில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் உப்புநீராக மாறியது. இதனைஅவரால் சரிசெய்ய முடியாமல் போனது. இதைதொடர்ந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்றவர்களின் பேச்சுக்கள் மற்றும் புத்தகங்களையும் படித்த அவர், இயற்கை முறையில் பல விதமான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடலாம் என்று முடிவு செய்தார்.தனது வயலில் ஒரு ஏக்கருக்கும் குறைவான அளவில் பாரம்பரிய நெல் ரகங்களை விளைவித்த குலோத்துங்கன், நல்ல விளைச்சல் கிடைத்ததால், தற்போது 20 ஏக்கருக்கு மேல் இயற்கை விவசாயத்தை செய்து வருகிறார். பொறியியல் பட்டதாரியின் இந்த செயல் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.