இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் நாளில் தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் இந்தியாவின் இயற்கை அழகு மற்றும் அதன் இயற்கை வளத்தினைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்திய தேசம் சிறந்த சுற்றுலாத் தலங்களைக் கொண்ட முதன்மையான நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. முக்கியமாக சுற்றுலாத் துறை மூலம் நாட்டிற்கான பொருளாதாரம் அதிகரிக்கிறது.
உலக பயணம் மற்றும் சுற்றுலாத் துறையானது சுற்றுலா அளவில் உலக நாடுகளில் இந்தியாவிற்கு ஆறாவது இடத்தினை வழங்கியுள்ளது. கடந்த வருடத்தில் மட்டும் இந்தியாவிற்கு 7.2 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்த ஆண்டு 8.6 மில்லியனாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் இந்தியாவின் ஜி.டி.பி 5.8% சுற்றுலாத் துறையின் மூலம் அதிகரித்துள்ளது. மேலும் 32.1 மில்லியன் நபர்களுக்கு இந்தச் சுற்றுலாத் துறையின் மூலம் அதிகளவு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
சுற்றுலாத் துறையை முன்னேற்றும் விதமாக இந்தியாவில் 1948ஆம் ஆண்டு தேசிய சுற்றுலாத் துறை உருவாக்கப்பட்டது. இதன் முதல் அலுவலகம் மும்பையிலும் டெல்லியிலும் உருவாக்கப்பட்டது. பிறகு 1951ஆம் ஆண்டில் இந்த அலுவலகம் கல்கத்தாவிலும் சென்னையிலும் ஏற்படுத்தப்பட்டன. தேசிய சுற்றுலாத் தினத்தின் கருப்பொருள் ”தேகோ அப்னா தேஷ்” என்பதாகும். இதன் பொருள் நம் தேசத்தைக் காணுங்கள் என்று பொருள். இது நமது நாட்டின் இயற்கை வளம் பற்றி நமக்கும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டது ஆகும்.
Discussion about this post