திருப்பதியில் நாளை தொடங்க உள்ள தேசிய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் டிசம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான தடகள போட்டிகள் நடைபெற உள்ளன. 28 மாநிலங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 116 மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வருபவர்களுக்கு வழிகாட்டும் விதமாக திருப்பதி, ரேணிகுண்டா ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் வரவேற்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டிகள் நடைபெற இருக்கும் தாரக ராம விளையாட்டு அரங்கை சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா ஆய்வு செய்தார். போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு, தங்குமிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Discussion about this post