டெல்லியில் காற்று மாசு பிரச்னையை போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத டெல்லி அரசுக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் சுற்றுச் சூழலும், காற்றின் தரமும் மாசுபடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த அபராத தொகையை டெல்லி அரசு அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்தும், சுற்றுச்சூழலை மாசுபடுத்திய மக்களிடம் இருந்தும் வசூலித்து செலுத்த வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த தவறினால் மாதம் தோறும் 10 கோடி செலுத்த வேண்டி இருக்கும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.