புதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர்.

தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோருக்கு சபாநாயகர் தனபால், பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இடைத்தேர்தலில் பெற்ற அமோக வெற்றி அதைத்தொடர்ந்து புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டதை தொடர்ந்து அதிமுகவின் பலம் 124ஆக உயர்ந்துள்ளது. எதிர்க்கட்சியான திமுகவின் பலம் 100ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பலம் 7ஆக சரிந்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு உறுப்பினரும், சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரனும் உள்ளனர். இவர்களை தவிர சபாநாயகர் தனபால் தனியாக உள்ளார்.

Exit mobile version