நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலின் தென்மேற்கில் நிலவி வந்த, காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தமிழகம், புதுச்சேரியில், பரவலாக மழையை கொடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், மேலும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
சில இடங்களில், கன மழைக்கும் வாய்ப்பு உண்டு. காலையிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் காற்று வீசி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை பெய்து வருகிறது.
Discussion about this post