தர்மலிங்கேஸ்வரர் கோவில் இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டது இல்லை என்று பொதுச்செயலாளர் மீது பொய்ப்பிரச்சாரம் செய்கிறது விடியா திமுக..அறநிலையத்துறைக்கு உரியதுதான்..ஆதாரம் இதோ!

நேற்று சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற திருவிழாவினை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட 25 அர்ச்சகர்கள் ஒரே நேரத்தில் குளத்தில் இறங்கி உள்ளனர். சுவாமியை நீராட்டுவதற்காக இவர்கள் குளத்தில் இறங்கியுள்ளனர். இதன் காரணமாக ஐந்து அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது.

இத்துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்தும், இந்து அறநிலையத்துறை மற்றும் ஆளும் அரசின் மெத்தனப்போக்கினை கண்டிக்கும் பொருட்டும் எதிர்க்கட்சித்தலைவரும், கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தன்னுடைய சுட்டுரைப்(டிவிட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்திருந்தார். அப்பதிவில்,

“சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அறநிலையத் துறையின் அலட்சியத்தாலும் மெத்தனத்தாலுமே இத்தகைய அசம்பாவிதங்கள் கோவில் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.உயிரிழந்த 5 அர்ச்சகர்களுமே 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளவயதினர் என்பது மேலும் வருந்தத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க மிகுந்த கவனத்துடன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

 

 

பொதுச்செயலாளரின் இந்த இரங்கல் பதவிற்கு ஆளும் விடியா திமுவினைச் சேர்ந்த சிலர் தர்மலிங்கேஸ்வரர் கோவில் இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கோவில் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொய்க் கருத்து கூறி அரசை கண்டிக்கிறார் என்றும் கூறிவருகிறார்கள்.

உண்மையில் யார் பொய்சொல்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் கீழுள்ள படத்திலும் உள்ளது.

மேலுள்ள இந்த ஆதாரத்தின் தர்மலிங்கேஸ்வரர் கோவில் இந்து அறநியைத்துறைக்கு பாத்தியப்பட்ட மற்றும் அதன் கீழ் இயங்கக்கூடிய கோவில் என்று நிரூபணம் ஆகியுள்ளது. குறிப்பாக திருக்கோயில் எண் Tm000377 என்று இந்து அறநிலையத்துறையே அங்கீகார எண் வழங்கியிருக்கிறது. இத்தகவலை இந்து அறநிலையத்துறையின் இணையதளத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.

எனவே பொதுச்செயலாளர் அவர்கள் இந்துசமய அறநிலையதுறையினை இத்துயரசம்பவத்தில் சுட்டிக்காட்டியது சரியே. இச்செய்தியினை முக்கியமாக “விடியா திமுகவினர்” படித்து தெரிந்து அறிந்து கொண்டு தரவுகளுடன் வந்து பேசவும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.

Exit mobile version