நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 7 கிராம மக்கள் திடீர் சாலை மறியில் ஈடுபட்டனர்.
தட்டாங்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மூப்பனார் நகர், ஜீவா நகர், மேட்டுக்கடை உள்ளிட்ட கிராமங்களில் சாலை, பாதள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மழைக் காலங்களில் வீடுகள் முன் தேங்கும் மழைநீரில் , கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுக்கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் இதுகுறித்து கோரிக்கை விடுத்தும், இதுவரை ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காகவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
தாமதிக்காமல் அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்தும்படி அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Discussion about this post