மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறந்து விடப்படுவதால், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் காவிரி கரையோரப் பகுதிகளை வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறந்து விடப்படுவதால், அந்த நீர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் காவிரி ஆற்றில் திரண்டு ஓடுகிறது. இதனால், பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் உள்ள காவிரி கரையோரப் பகுதிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடக்கமாக, பள்ளிபாளையத்தில் காவிரி கரையோரம் உள்ள சத்யா நகர், ஆவாரங்காடு, ஜனதா நகர் உள்ளிட்ட கரையோர பகுதிகளையும், இதனையடுத்து, குமாரபாளையம் காவிரி கரையோரம் உள்ள மணிமேகலை தெரு, கலைமகள் வீதி, அண்ணா நகர், காவிரி நகர் ஆகிய இடங்களிலும் காவிரி ஆற்றில் நீர் வரத்து உள்ளதை அவர் பார்வையிட்டார்.