நீலகிரி மாவட்டம் குன்னூரில் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா நன்றி கூற வந்த போது பொதுமக்கள் முற்றுகையிட முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா, தனது தேர்தல் வாக்குறுதியில், பொதுமக்கள் 5 சவரன் தங்க நகைகளை அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் அடமானம் வைத்து இருந்தால் அதை திருப்பி தருவதாகவும், கல்விக்கடன் ரத்து செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற ஆ.ராசா நன்றி கூற குன்னூருக்கு வருகை தந்தார். அப்போது, வாக்குறுதிகளை நிறைவேற்றித் தரக்கோரி, நூற்றுக்கான பெண்கள் அவரை முற்றுகையிட முயற்சித்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பெண்கள் கூறுகையில், கடந்த ஆண்டு பிள்ளைகளின் கல்வி செலவிற்காக வங்கியில் அடமானம் வைத்த தங்க நகைகள் முழ்கும் நிலையில் உள்ளது எனவும், எனவே திமுக வாக்குறுதியில் கூறியதைப்போல் திருப்பி தர ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறினர்.
Discussion about this post