நேற்று தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது போலவே, நாகாலாந்திலும், மேகாலயாவிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்தில் 84.66% வாக்குப்பதிவும், மேகாலயாவில் 76.66% வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் தற்போதைய ஆட்சியாளர்களின் ஆட்சிகாலம் மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் திரிபுராவில் கடந்த 16ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்றைக்கு நாகலாந்து, மேகாலயாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
மேலும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் போலவே, மேற்குவங்கத்தின் சாகர்திகி தொகுதி, அருணாச்சல பிரதேசத்தின் லும்லா தொகுதி, ஜார்க்கண்டின் ராம்கர் தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன.