திருப்பூர் மாவட்டம் உடுமலையில், நூதன முறையில் கம்ப்யூட்டரில் ஹேக் செய்து பணம் பறிப்பதாக, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உடுமலையில், ஸ்டுடியோ உரிமையாளர்களின் கம்ப்யூட்டரை ஹேக் செய்து, அதில் உள்ள போட்டோக்கள், வீடியோக்களை ஹேக்கர்கள் அழித்துள்ளனர். பின்னர், 35 ஆயிரம் முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்தால் மட்டுமே, அழிக்கப்பட்ட தகவல்கள் திரும்ப வழங்கப்படும் என கூறியுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட சதீஷ் என்பவர், உடுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், இதே பகுதியை சேர்ந்த பல ஸ்டுடியோ உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post