தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என ராகுல் காந்தி பிடிவாதம் பிடிப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் 52 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது. 55 தொகுதிகளுக்கும் குறைவாக வெற்றி பெற்று இருப்பதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை 2-வது முறையாக இழக்கும் நிலை காங்கிரசுக்கு உருவாகியுள்ளது.
இந்நிலையில் அண்மையில் நடந்த காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். இதற்கு செயற்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ராகுல் காந்தி ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றுவிட்டார் என கூறப்பட்டது.
இந்நிலையில் 1 மாத காலத்திற்குள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க ராகுல்காந்தி கெடு விதித்துள்ளதாகவும், கட்சி தலைவர் பதவியில் நீடிக்க அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post