முரசொலி அலுவலகம் வாடகை கட்டடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா..? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், முரசொலி அலுவலகம் இருக்கும் இடத்தின் மூலப் பத்திரத்தை காட்டவில்லை, குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா..? என கேட்டுள்ளார். சவால் விட்ட மு.க.ஸ்டாலின் அரசியலில் இருந்து விலகுவாரா..? என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் இருந்தாலும், அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி… “முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம்” என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போது நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்..? என்று தனது டுவிட்டரில் பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post