மழைநீர் கட்டமைப்புகளை ஏற்படுத்தி சென்னை மாநகராட்சி சாதனை

வடகிழக்குப் பருவமழைக்கு முன்பே, கூடுதல் மழைநீர் கட்டமைப்புகளை ஏற்படுத்தி சென்னை மாநகராட்சி சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் கோடைக் காலங்களில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையை சாமளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, நீர் இருப்பை உறுதிப்படுத்த மழைநீர் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். முதலமைச்சரின் உத்தரவை அடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில் குழுக்கள் நியமிக்கப்பட்டு, சுமார் 3 லட்சத்து 5 ஆயிரத்து 925 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்யப்பட்டது.

இதில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 821 கட்டடங்கள்ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு நல்ல நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 24 ஆயிரத்து 701 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் புதிதாக மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமின்றி 57 ஆயிரத்து 170 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை என்பதும் கண்டறியப்பட்டு அங்கு புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி உதவி வருகிறது.

சென்னை மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கையால் இலக்கைவிட 24 ஆயிரம் வீடுகளில் மழைநீர் கட்டமைப்புகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளது.

Exit mobile version