மும்பை பங்கு சந்தை இன்று ஏற்றத்துடன் துவங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதில் இருந்து மும்பை பங்குச்சந்தை சில சமயங்களில் சற்று இறக்கம் கண்டாலும் பெரும்பாலும் ஏற்றத்துடனே இருந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மீண்டும் பொறுப்பேற்ற பிறகு மும்பை பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது.
இந்தநிலையில், வார விடுமுறைக்கு பின்னர் இன்று காலை துவங்கிய மும்பை பங்குச்சந்தை 156.67 புள்ளிகள் ஏற்றமடைந்து 39 ஆயிரத்து 870.87 புள்ளிகளை தொட்டது. இதேபோல் நிஃப்டி 38.80 புள்ளிகள் உயர்ந்து 11ஆயிரத்து 961.60 புள்ளிகளை அடைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.