இசை படைப்புகளுக்கு விதிக்கப்பட்ட சேவை வரியை எதிர்த்து, பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என கடந்த 2019ல் ஜி.எஸ்.டி. ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அதேபோல் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது படைப்புகளுக்கு 1 கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த மேண்டும் என நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து இருவரும் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Discussion about this post