ட்ரோல் செய்த கணவர் தோனிக்கு, பதிலடி கொடுத்த சாக்‌ஷி

இந்திய அணி வீரர் தோனி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி எடுத்த வீடியோவை, தற்போது ட்ரோல் செய்துள்ளார்.

இந்திய அணி வீரரும், முன்னாள் கேப்டனான தோனி, 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேசப் போட்டிகளில் விளையாட நிலையிலும், அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலாவருகிறது. குறிப்பாக, அவரது மனைவி சாக்‌ஷி, கணவர் தோனியுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்வார். இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹோட்டலுக்கு சென்ற கணவர் தோனியை, கொஞ்சிபடியே வீடியோ எடுத்து சாக்‌ஷி வெளியிட்டது இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இந்த வீடியோவை சாக்‌ஷி எதற்காக எடுத்தார் என, மீண்டும் சாக்‌ஷி எடுக்கும் வீடியோவில் தோனி கிண்டலாக கூறியுள்ளார்.

சாக்‌ஷி எடுத்த வீடியோவில் தோனி கூறுகையில், இன்ஸ்டகிராமில் அதிக நபர்கள் உன்னை பின் தொடர வேண்டும் என்பதற்காவே, நீ இதனை செய்கிறாய் என்று ட்ரோல் செய்தார். அப்போது, தோனியின் சொல்லை கேட்டவர்கள், சிரிக்க தொடங்கிய நிலையில், உங்கள் ரசிகர்கள் என்னையும் நேசிக்கிறார்கள் என்றும் உங்களில் சரிபாதி நான் என்றும் சாக்‌ஷி தெரிவித்தார். மேலும், ரசிகர்கள் உங்களை எப்போதும் பார்க்க விரும்புவதாவும், மஹி பாய் எங்கே என்றும் கேட்பதாக அவர் கூறினார்.

 

Exit mobile version