என்ன தான் ஆச்சு சி.எஸ்.கே-க்கு – ஏன் இந்த சொதப்பல்?

`உன்ன இப்படி நாங்க பாத்ததில்லையே தல’ என்றபடி குமுறுகின்றனர் சி.எஸ்.கே. ரசிகர்கள். 2020-ம் ஆண்டு கொடுத்த பல்வேறு சோதனைகளில் சி.எஸ்.கே.வின் ஆட்டமும் ஒன்றாக மாறிவிட்டது. நேற்றுவரை `ப்ளே ஆஃப்’ க்குள் சி.எஸ்.கே சென்றுவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு, அந்த நம்பிக்கை உதிர ஆரம்பித்துவிட்டது. `வயசான டீம்தான் சார்; ஆனாலும் தங்கம்’ என்று இன்றளவும் ஏதோ அதிசயம் நடந்துவிடாதா என்று மஞ்சள் ஜெர்சியையே உற்றுநோக்கிக்கொண்டிருக்கின்றனர் சி.எஸ்.கேவின் ஆஸ்தான ரசிகர்கள். உண்மையில் அணியில் என்னதான் பிரச்னை பார்ப்போம்.

சென்னை அணி விளையாடிய பத்து சீசன்களில் அனைத்து சீசன்களிலும் ப்ளே ஆப் சென்று விட்டது, மூன்று முறை சாம்பியன், ஆறு முறை ரன்னர் அப், ஒரு முறை மட்டுமே ப்ளேஆப் சென்று வெளியேறியது.

முதலில் அணியின் தோல்விக்கான காரணங்களை வரிசைபடுத்திவிடுவோம்.

> சரியான ப்ளேயிங் 11 இல்லாதது

> ஃபவர் ப்ளேவில் சொதப்புவது

> ஃபில்டிங்கில் கோட்டைவிடுவது

> மிடில் ஆர்டரில் அடித்து விளையாட ஆள் இல்லாதது.

கடந்த ஐ.பி.எல்.யில் அதிக விக்கெட் விழ்த்திய இம்ரான் தாகிர், இந்த முறை வெறும் சேரைத் தேய்க்க வைப்பது என்பது எந்த விதத்தில்லும் நியாயம் இல்லை. வாட்சன் ஓப்பனராக இறங்கி சிக்ஸர் விளாசுவார் என்று எதிர்பார்த்தால் பெரும் சொதப்பலாக இருக்கிறார். தொடர்ந்து இரண்டு அரை சதங்களை எடுத்த வாட்சன், அடுத்தடுத்த ஆட்டங்களில் `WHATSON?” ஆகவே இருக்கிறார். நம்பிக்கை நட்சத்திரமாக களமாடுவார்கள் என்று எண்ணிய வாட்சன் டூப்ளிசிஸ் இணை சொதப்பியது, ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஃபார்மில் இல்லாத முரளி விஜய்க்கு 3 முறை வாய்ப்பு அளித்த தோனி, ஜெகதீசனுக்கு போன்ற வீரருக்கு ஒரு முறை மட்டுமே வாய்ப்பு அளித்தது ஏன்
என புரியவில்லை. சொல்லப்போனால், ஃபீல்டர்களை உற்று நோக்கி, க்ளவுசை இறுக்கி சிங்கிள் கூட தட்டாத கேதர் ஜாதவுக்கு அளிக்கும் வாய்ப்பு கூட ஜெகதீசனுக்கு இல்லை. ஜாதவ் பங்களிப்பு என்பது அணிக்கு இல்லாத போது ஒரு ஆல்ரவுண்டர் ப்ளேயிங் லெவனில் எதற்கு?

சாம் கரன் போன்ற இளம் வீரர்கள் இருப்பது அணிக்கு பலம் என்றாலும், சாம் ஃபினிஷ்ங் சரியாக அமையும் என்றாலும் ஓப்பனிங் இறங்குவது சற்று சென்னை அணிக்கு உறுத்துலாக தான் உள்ளது. வருவது நான்கு, ஐந்து சிக்ஸரை பறக்க விடுவது அவுட் ஆவது என `சுட்டி குழந்தை’ என்னும் விளையாட்டு தனமாக விளையாடுவது சென்னை அணிக்கு கடும் சரிவு தான். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 19வது ஓவரில் 4 ரன்கள் ஒரு விக்கெட் என எடுத்து சென்னை பக்கம் வெற்றியை திருப்பியவர் கடைசி ஓவர் வீச வந்த ஜடேஜா மூன்று சிக்ஸர் கொடுத்து டெல்லி அணியை வெற்றி பெறச்செய்தார். ஜடேஜா இந்த ஐ.பி.எல்-லில் ஒரு போட்டியில் மட்டும் தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்., மீதம் விளையாடிய போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறினார். அவரது பவுலிங்கில் கூட பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

ஃபில்டிங்கில் கோட்டைவிடுவது

சாமி, எதிலும் பலன் இல்லாதது போல் சென்னை அணி உள்ளது, பேட்டிங்கில், பொலிங்கில், ஃபில்டிங் என அனைத்திலும் சொதப்பல்., ஷ்க்ர் தவான் கேட்சை 4 முறை விட்டனர், தவானுக்கு அதிர்ஷ்டம் தான் அதனால் அவர் சென்சூரி அடிக்க நேரிட்டது. கொரோனாவைக் காரணம் காட்டிய வீரர்கள், இப்பொழுதும் மிஸ் ஃபில்ட் செய்வது ரொம்ப அநியாயம் பாஸ்

மிடில் ஆர்டரில் அடித்து விளையாட ஆள் இல்லாதது

வாட்சன், டுப்ளெஸ்ஸிக்கு பிறகு, ராயுடுவை விட்டால் அடுத்து அடித்து ஆடும் பேட்ஸ்மேன் இல்லை என்பது தான் உண்மை. தோனி, ஜாதவ், ஜடேஜா (சென்னையின் படைத்தளபதி), நிலைத்து நின்னு ஆடாத சாம் போன்ற வீரர்களை பார்க்கும் போது ரசிகர்களுக்கு கடுப்பு மட்டுமே மிச்சம். மிடில் ஆர்டரை சரி செய்ங்க பாஸ்!

சென்னை அணியின் மிகப் பெரிய பலம் அனைவருக்கும் அறிந்ததே “ நம்ம தல” தான்.. மற்ற அனைத்து அணிகளும் தங்களின் வீரர்களை பரிசோதித்து அணிகளின் மாற்றங்களை கொண்டு வருகின்றனர், ஆனால் சென்னையைப் பொறுத்த வரையில் அரைத்த மாவே அரைக்கும் போக்கில் அனுபவம் வாய்ந்த வீரர்களை வைத்துக் கொண்டு என்ன தான் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. சி.எஸ்.கே பயிற்சியாளர் ஃபிளெம்மிங், `நாங்கள் வெற்றி பெற அணியை வைத்துள்ளோம், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க இல்லை’ என்று கூறுகிறார். தோனியின் நிலைப்பாடு இதற்கு காரணமா? அல்லது ஃபிளெம்மிங் எடுக்கும் முடிவின் படி அணி செயல்படுகிறதா என்பது புரியவில்லை.

`ஒரு தடவ தான் தவறும்’ என்றபடி கெத்தாக சொல்லிக்கொண்டிருக்கும் ரசிகனுக்கு, சி.எஸ்.கே.வின் அடுத்தடுத்த தோல்விகள், `என்னமோ பண்ணுங்க’ என்ற மனநிலைக்கு தள்ளிவிடுகிறது. அணியில் ஓட்டைகள் இருப்பது சகஜம்தான். அதனை சரி செய்ய வழியைக் கண்டுபிடிக்காவிட்டால் மூழ்க வேண்டியதுதான். `தோனி’க்காகத்தான் சி.எஸ்.கே ஆட்டத்தைப்பார்க்கிறேன் என்பவர்களுக்கு வெற்றி, தோல்வி என்பதைத்தாண்டி `உன்ன கிரவுண்ட்ல பாக்குறதே, மகிழ்ச்சி தல’ என்ற வாக்கியமே நிறைவைத் தந்துவிடுகிறது.

 

Exit mobile version